பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.

கராச்சி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே 101 ஓட்டங்களையும் வில்லியம்சன் 85 ஓட்டங்களையும் னர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், நவாஸ் 4 விக்கெட்டுகளையும் நஷிம் ஷா 3 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவூப் மற்றும் உஸாமா மிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 262 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 43 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், நியூஸிலாந்து அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 79 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லொக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னர், பிரேஸ்வெல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 92 பந்துகளில் 1 சிக்ஸர் 13 பவுண்ரிகள் அடங்களாக, 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டெவோன் கோன்வே தெரிவுசெய்யப்பட்டார்.

Share.
Exit mobile version