களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

மின்னுற்பத்தி நிலையத்தினை செயற்படுத்துவதற்கான நெப்தா எரிபொருள் இல்லாமையே இதற்கு காரணம் என்றும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக 165 மெகாவோட் மின்சாரம் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை ஒரு நாளுக்கு இயக்குவதற்கு சுமார் 9 லீற்றர் நெப்தா எரிபொருள் தேவைப்படுவதாகவும் மின் பொறியியலாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share.
Exit mobile version