நாட்டின் பல பகுதிகளில் இன்று சீரான வானிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 20-35 கிலோமீற்றராக காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம் வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.