அஜித்தின் AK 61

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்துடன் இணைந்த முன்னணி நட்சத்திரம்

இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆம், தான் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்துடன் AK 61 படத்தில் நடிப்பதாகவும், படத்தின் கதை மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version