இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வி கூட்டுறவு சங்கத்தின் காரியாலயத்துக்கு முன்பாக குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிறுவனத்தின் மூலமாக கடன் உதவிகளை பெற்றுக்கொள்ள பரவலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விண்ணப்பித்த போதிலும் பல மாத காலமாக அதனை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது,ஆசிரியர்களது நலனுக்காக உருவாக்கப்பட்ட குறித்த சங்கத்தில்
ஆசிரியர்களது நலன்களுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமல் அரசியல் லாபத்திற்காக மாத்திரமே குறித்த நிறுவனம் தற்போது இயங்கி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் நிர்வாக குழுவிற்கான காலை இல்லை முடிவடைந்த போதிலும் இன்னமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் எவரும் தெரிவு செய்யப்படாமையானது தமக்கு மிகுந்த வருத்தத்தை தெரிவிப்பதாகவும் வெகுவிரைவில் புதிய நிர்வாக குழுவானது கூடி அதன் மூலம் ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற நிதி தொடர்பான குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share.
Exit mobile version