உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக தடையில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று(11) அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version