இன்று மதியம் 13.25 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்து யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வவுனியாவுக்கு அருகாமையில் சாந்தசோலை எனும் இடத்தில் வைத்து இனந்தெரியாத இரண்டு மர்ம நபர்களால் பேரூந்துக்கு கல்லால் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவத்தில் பேரூந்தின் முன்பக்க வலதுபுற கண்ணாடி சேதமடைந்துள்ளது.

பேரூந்தின் சாரதிக்கு கல் தாக்கி கண்ணாடி துவல்களும் உடம்பில் கீறி கிழித்துள்ளது. சாரதி உடனடியாக வவுனியா அரசாங்க வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

Share.
Exit mobile version