இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் லிட்றோ நிறுவனத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடர்புபட்ட நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த காலங்கள் தோறும் நிகழ்கால அரசாங்கத்தின் கீழ் குறித்த நிறுவனங்களின் பாரிய நட்டம் மற்றும் கடன் சுமை தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டதை முதன்மையாகக் கொண்டு இந்த நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக பணியாளர்கள் அஞ்சுகின்றனர்.

அத்துடன், தட்டுபாடுகளின்றி எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்குவதென்றால் வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என மக்களின் பக்கமிருந்து பிரதானமான விவாதத்தை தோற்றுவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Share.
Exit mobile version