உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கடும் குளிர் காரணமாக ஒரே நாளில் 25பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த உறைதலால் மாரடைப்பு ஏற்பட்டும், மூளை செயலிழந்தும் இவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் ஆவர்.

இதனால் கடும் குளிர்காலங்களில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியைத் தவிர்க்கும்படி நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடும் பனி மூட்டம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டீகர் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத் துள்ள நிலையில், நாளை வரையில் இந்த 7 மாநிலங்களிலும் அடர்த்தியான மூடுபனி நிலவும் எனவும், அதன் பிறகு குளிர் அலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி ஆர்கே.ஜெனமணி தகவல் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version