தலதா மாளிகை குறித்து விமர்சனம் செய்த சமூக ஊடகர் சேபால அமரசிங்க சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தையும் தலதா மாளிகையையும் அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்திருந்தனர்.

இதையடுத்தே அவர் சற்றுமுன்னர் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version