கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவர் மறைந்த போப் எமரிட்டஸ் 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (வியாழக்கிழமை) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இது தொடர்பில் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க நேற்று (புதன்கிழமை) காலை கொழும்பில் உள்ள தூதரகத்திற்கு (வத்திக்கான் அப்போஸ்தலிக் நன்சியேச்சர்) விஜயம் செய்தார்.

முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் தனது 95வது வயதில் 2022 டிசம்பர் 31 அன்று வத்திக்கான் நகரில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார், அங்கு அவர் உடல்நலக்குறைவு காரணமாக 2013இல் பதவி விலகிய பின்னர் தனது இறுதி ஆண்டுகளைக் கழித்தார்.

பெனடிக்ட், கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்தினார், 2013இல், 1415 இல் கிரிகோரி XIIக்குப் பிறகு இராஜினாமா செய்த முதல் போப் ஆனார்.

Share.
Exit mobile version