மனிதகுலத்தின் இன்றுவரை மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திடத்தின் மூலம் இதை சாதித்து காட்டியது. அதற்கு முதல் முயற்சியாக நாசா நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையை பல முறை நடத்தியது.

அதன்படி 1968-ம் ஆண்டு ஒக்டோபர் 11-ம் திகதி முதல் முறையாக ‘அப்பல்லோ 7’ என்ற விண்கலத்தில் மனிதர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது நாசா. டொன் எப் ஐசெல், வோல்டர் எம். ஷிரா மற்றும் வோல்டர் கன்னிங்ஹாம் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் ‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் 11 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தனர்.

அதோடு அவர்கள் தங்கள் விண்வெளி பயணத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்தனர். பின்னர் ஒக்டோபர் 22-ந் திகதி அவர்கள் அதே விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளி சென்று திரும்பிய முதல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.

‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர்களான டொன் எப் ஐசெல், வோல்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கடைசி நபராக வோல்டர் கன்னிங்ஹாம் மாத்திரம் உயிருடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று அவர் தனது 90 ஆவது வயதில் உயிரிழந்தார். அமெரிக்கக் கடற்படையிலும் சிறப்புப் படையிலும் விமானியாக பணியாற்றிய கன்னிங்ஹாம், ஓய்வு பெறுவதற்கு முன் போர் விமானியாக 54 பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு 1963-ம் ஆண்டு அவர் நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share.
Exit mobile version