டீசல் விலை குறைப்பிற்கு அமைவாக பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இன்று(04) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

டீசல் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது குறைக்கப்பட வேண்டிய பஸ் கட்டணங்களின் சதவீதங்கள் தொடர்பான அறிக்கையொன்று அமைச்சிடம் கையளிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version