2022 ஆம் ஆண்டில் மொத்தம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டிசம்பர் மாதத்தில் 91 ஆயிரத்து 961 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து 19 ஆயிரத்து 963 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 17 ஆயிரத்து 350 பேரும், இங்கிலாந்திலிருந்து 7 ஆயிரத்து 879 பேரும், அவுஸ்ரேலியாவிலிருந்து 5 ஆயிரத்து 158 பேரும், ஜேர்மனியைச் சேர்ந்த 4 ஆயிரத்து 984 நபர்களும் இவர்களில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அதிகமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து நான்கு பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Share.
Exit mobile version