இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கிடைகாதமை காரணமாக அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க அரசாங்கம் இன்னும் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் கோட்டபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version