இலங்கையில் உள்ள பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இரசாயனங்கள் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இது தொடர்பில் தங்களுக்கு அறிவித்துள்ளதாக கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை தீவிரமடையும், இதுவரை சந்திக்காத அளவு நோயாளிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு முக்கியமான கட்டத்தில் சுகாதாரத் துறையை நிறுத்தும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டிலுள்ள நிலைமை நீடித்தால் அடுத்து வரும் நாட்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version