நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் விலைக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, புதிய விலையாக ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 415 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 355 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Share.
Exit mobile version