அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களால் சமர்ப்பிக்கப்பட்ட 58 புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி 50 விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

கடந்த மாதம் தொடர்பான உள்நாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தரவுகளுக்கமைய இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 8 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவு அறிக்கைகளின்படி, நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலிய புகலிடத்திற்கான விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 1,643 ஆகும்.

இதில் மலேசியர்கள் சமர்ப்பித்த 333 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, இதுவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் அதிக எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்தப் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தில் உள்ளது.

Share.
Exit mobile version