டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், குறித்த நபரை கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.