ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டது.

Share.
Exit mobile version