ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தக தொழிலதிபர் பவெல் என்டோவ், இந்தியாவுக்கான விஜயத்தின் போது உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவில் “சொசேஜஸ்” தொழிலில் தலைவரான என்டோவ், ஹோட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய சுற்றுப்பயணத்தில் அவருடன் சென்ற அவரது நண்பரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

பவெல் என்டோவ் கிழக்கு மாஸ்கோ பகுதியில் உள்ள விளாடிமிர் நகரைச் சேர்ந்த பிரபலமானவர்.

ரஷ்ய-உக்ரைன் போரை விமர்சித்ததன் காரணமாக அவரைப் பற்றிய ஊடக அறிக்கைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இதனால் அவர் ரஷ்ய அதிகாரிகளினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version