கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட ட்விட்டர் பயன்படுத்தும் 40 கோடி பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹேக்கர் ஒருவர் 40 கோடி ட்விட்டர் பயனாளர்களின் தகவல்களை திருடி, டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 கோடி ட்விட்டர் பயனாளர்களின் மின்னஞ்சல் விபரங்கள், பயனர் பெயர், பின்தொடர்பவர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவையும் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.