இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் தனியார் நிறுவனமொன்றில் பங்குகளில் 64 இலட்சம் ரூபாவை முதலீடு செய்திருந்த போதிலும், கூட்டுத்தாபனத்திற்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014இல் சிறு இலாபங்கள் கிடைத்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் முதலீட்டு மதிப்பு கணக்கிடப்பட்ட விதம் மற்றும் முதலீடு தொடர்பான பங்குகள் குறித்த போதுமான தகவல்களை நிறுவனம் வெளியிடவில்லை என்று கணக்காய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவல் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் 2019 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகளை குறிக்கிறது.

Share.
Exit mobile version