பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் டொம் லதம் 78 ஓட்டங்களுடனும் டேவோன் கோன்வே 82 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி, 273 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

கராச்சி மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பாபர் அசாம் 161 ஓட்டங்களையும் ஆகா சல்மான் 103 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சவுத்தீ 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வாக்னர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, இன்றைய இரண்டாம்நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம்நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Share.
Exit mobile version