மின்சாரக் கட்டணத்தை 60 – 65 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் றொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சின் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண உயர்வுக்கு பயன்படுத்தப்பட்ட 20 அனுமானங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த கருதுகோளின் பிரகாரமே இந்த கட்டண அதிகரிப்பு சதவீதம் கண்றியப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் கட்டண அதிகரிப்பில் கோரப்பட்ட தொகை கிடைக்காமையால் மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு கட்டணத்தை அதிகரிக்கும் போது திறைசேரியின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்றார்.

Share.
Exit mobile version