ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து உருவாக்கும் சதியை பொதுமக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்ததாக கூறப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் மீட்பர் என்றும், விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது மக்களின் விருப்பம் அல்ல என்றும் எம்பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து முன்மொழிந்த ஒன்றை நாட்டில் யார் நம்புவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ரணில் கோத்தபய ராஜபக்சவை நம்புகிறார், பிந்தையவர் ரணிலை நம்புகிறார். அவர்களின் சதிக்கு இந்த நாட்டில் உள்ள எந்தவொரு பிரஜையும் இம்முறை வீழ்ந்துவிடமாட்டார்” என பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.