சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவர அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஜனவரி 8ஆம் திகதி முதல் இந்த பணிகள் நிறைவடையும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்ச் 2020 முதல், சீனாவுக்கு வரும் அனைத்து மக்களையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சீன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சீனா தனது கொரோனா கொள்கைகளை கைவிட்ட பிறகு கட்டுபாடுகள் நீக்கப்படும் அண்மையகால நடவடிக்கை இது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
எவ்வாறாயினும், சீனாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா புள்ளிவிவரங்களை வெளியிடுவதை சீனா நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.