இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக மூவாயிரத்து 596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடத்தல்களின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்து 800 அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டில் கடத்தல்களின் எண்ணிக்கை 835 எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version