எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கலைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட பின்னர் 14 நாட்களுக்குள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version