தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மரக்கறி எண்ணெய் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கஹதுட்டுவ பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் கசிந்து வாகனங்களின் போக்குவரத்திற்கு சிறிது இடையூறு ஏற்பட்டது.
விபத்தின் போது சாரதியுடன் உதவியாளரும் உடனிருந்ததால் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்து காரணமாக காலி நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு ஒழுங்கை முற்றாக மூடப்பட்டது.
கொட்டாவையில் இருந்து பாணந்துறைக்கு மரக்கறி எண்ணெய் மற்றும் சில பொருட்களை ஏற்றிச் சென்ற போது, லொறியின் பின் இடது ரயர் வெடித்ததில் லொறி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, குறித்த லொறியில் இருந்த மரக்கறி எண்ணெய் பீப்பாய்கள் வெடித்து சிதறியதால், அதிவேக நெடுங்சாலையின் ஒருபக்க ஒழுங்கையில் எண்ணெய் முழுவதுமாக பரவியுள்ளது.
இந்த விபத்தில் லொறி மாத்திரமே பலத்த சேதமடைந்துள்ளதாகவும் நெடுஞ்சாலையில் உள்ள சொத்துக்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.