அரச சேவையை முறையான முறையில் நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய இவ்வருட இறுதியில் பெருமளவிலான அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறவுள்ள நிலையில் அரச உத்தியோகத்தர்களை சமநிலைப்படுத்தும் நோக்கில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. .
பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், ஒருங்கிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.