மனிதர்கள் பல வகையான வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உலக சாதனைகளை செய்து வரும் நிலையில், சமீபத்திய உலக சாதனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனைகள் தங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு பெண் குறித்து வெளியிட்டுள்ள, பதிவில் ஒன்பது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இருப்பதைக் காட்டும் வீடியோ இடம்பெற்றுள்ளது.

மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் குறித்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்

அடாமா, ஓமோவ், ஹவா, காதிதியா, பத்தூமா என்று 5 பெண்குழந்தைகளும் ஓமர், எல்ஹாட்ஜி, பா மற்றும் முகமது என 4 ஆண் குழந்தைகளும் பெயர் வைத்துள்ளனர்.

ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போவது குறித்து அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. மாலியில் உள்ள வைத்தியர்கள் ஹலிமா ஏழு குழந்தைகளை பெற்றடுப்பார் என்று நம்பினர், அதனால் மாலி அரசாங்கம் அவரை மொராக்கோவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்.ஹலிமாவுக்கு அங்கு 9 குழந்தைகள் பிறந்து உள்ளன.

இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நாத்யா சுலேமானுக்கு எட்டு குழந்தைகள் பிறந்ததே சாதனையாக இருந்தது.

Share.
Exit mobile version