சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணம், அரசியல் நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் தேவையின்றி கூட வேண்டாம் என அறிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுமாறும் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதோடு கொரோனா முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரோன் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.