இலங்கையிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை வழங்கியுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20,000 ரூபாவும் அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் கணக்கில் பணம் வைப்பிலிடப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version