பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை பரிசோதிக்கும் செயற்பாட்டை பாடசாலை குழுவொன்றுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் ஆசிரியர்கள், மாணவ தலைவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளடங்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Share.
Exit mobile version