இந்த ஆண்டு டெஸ்லா வாகன நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சிக்கு பெடரல் ரிசர்வ் வங்கியே காரணம் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா சந்தை மூலதனத்தில் 600 பில்லியன் டொலர்களுக்கு கீழாக சரிவடைந்ததை தொடர்ந்து, தம் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
அதில், பெடரல் ரிசர்வ் வங்கியை தாங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றும் அதன் வட்டி விகிதம் அதிகரிப்புமே காரணம் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கியதே அவரது கவன சிதறலுக்கு காரணம் என்று டெஸ்லா முதலீட்டாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.