தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள மொனராகலை-பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மொனராகலை மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு தேவையான பயிற்சி வசதிகளை வழங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, தற்போது மொனராகலை-பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையம் மற்றும் வளாகத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஒப்படைப்பதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share.
Exit mobile version