வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக நாட்டிற்கு குறுக்காக நிலைபெற்று வருவதால் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மத்திய பகுதிகளுக்கு மேலாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

குறை அழுத்த பிரதேசம் எதிர்வரும் மூன்று நாட்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி கிரமமாகச் செல்லக்கூடிய சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடை கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version