கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு 150க்கு மேல் சென்றதாகவும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக NBRO அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதோடு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version