கட்டாரில் இடம்பெற்ற உலகக் கிண்ண உதைபந்து தொடரின் இறுதி போட்டயில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் இறுதியில் இரு அணிகளும் 3-3 என சமனிலை வகித்தன. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி பிரான்சை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், உலகக் கிண்ண உதைபந்து தொடரில் அதிக கோல்கள் அடித்து தங்கப் பாதணி “கோல்டன் ஷூ” விருதை பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே வென்றார்.
அர்ஜென்டினா அணியின் மெஸ்சி தங்கப் பந்து “கோல்டன் போல்” விருதை வென்றார்.
சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மிட் பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் வென்றார், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை எமி மார்டினெஸ் வென்றார்.