ஜனசக்தி குழுமத்தின் தலைவரும் பிரபல வர்த்தகருமான தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பல்வேறு பிரிவுகளின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இடத்தையும் காரையும் மோப்ப நாய்கள் மூலம் பரிசோதித்ததாகவும், அந்த இடத்தின் CCTV காட்சிகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் மற்றும் தொலைபேசி தகவல் ஊடாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் படுகொலை தொடர்பான புலனாய்வு விசாரணைப் பிரிவினர், பொரளை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version