மலேசியாவில் சிலாகுர் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுலா பகுதியான படாங் கலி என்ற இடத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படும்போது 92 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 79 பேர் மாயமாகியுள்ளனர்.
இதற்கிடையில், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் வரை மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிலாங்குர் உட்பட பல மாநிலங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.