நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்திருந்தது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெப்ரவரி 06 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) தீர்மானித்ததையடுத்து அதுவரை 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் திறனை நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்காலிகமாக இழந்ததையடுத்து, உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான விலையை நிர்ணயித்துள்ளனர்.