இலங்கை எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ள சகல கட்சிகளினதும், மக்களினதும், சிவில் பிரதிநிதிகளினதும் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவே சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்று (15) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலவரங்கள் குறித்தும், பிரதான எதிர்க்கட்சியின் பொது வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது இலங்கை எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ள சகல கட்சிகளினதும், மக்களினதும், சிவில் பிரதிநிதிகளினதும் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவே சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் வெளிப்படையாக செயற்பட வேண்டும் எனவும், மக்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற வேண்டும் எனவும்,சகல மக்களினதும் கருத்துக்களுக்கு இடமளித்து ஜனநாயக ரீதியில் முன்னகர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க தூதுவர், நெருக்கடி நிலைமைகளில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை தாம் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.