எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.

தற்போதைய சூழலில் நிலக்கரியுடனான 24 கப்பல்கள் நாட்டை வந்தடைந்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர், அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்தமையினால் எதிர்காலத்தில் நீர் மட்டம் குறைவடைவதற்கான ஏதுநிலைகள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Share.
Exit mobile version