கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 650 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை கைப்பற்றியதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது செய்துள்ளனர்.

மெக்சிகோவில் இருந்து மாத்தறை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, ​​650 கிராம் போதைப்பொருள் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த சந்தேகநபரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அண்மைக்கால வரலாற்றில் மெக்சிகோவில் இருந்து கைப்பற்றப்பட்ட முதல் ஐஸ் போதைப்பொருள் ஏற்றுமதி இதுவென சுங்கத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளும் இந்த சோதனைக்கு உதவியுள்ளனர்.

Share.
Exit mobile version