லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன.
பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5 ரூபாவினாலும் குறைத்துள்ளது.
அதடிப்படையில் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 385 ரூபாய்,
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாய்
வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 460 ரூபாய்
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 190 ரூபாய்
டின்மீன் 490 ரூபாய்