கொழும்பு, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சில மணி நேரங்களில் டுபாய்க்கு சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய வர்த்தகரான மொஹமட் ரைசுல் ரிசாக் என்ற சொகுகு காரை செலுத்திய சாரதி, சனிக்கிழமை (10) காலை 9.55 மணியளவில் டுபாய்க்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபரின் பெயரில் மூன்று மேர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் இருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் தாயாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இரவு விடுதியில் இருந்து சனிக்கிழமை காலை திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் கொள்ளுப்பிட்டியில் ஓட்டோ மீது மோதியதில் 58 வயதுடைய ஓட்டோ சாரதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.