ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராதவிதமாக ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு யாரும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version