கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.